ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் முன்னதாக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
அந்த வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜார்கண்டில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது பல முக்கிய வாக்குறுதிகளை கொடுத்தார். அதாவது ஜார்கண்டில் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணிக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர் ஊழல் மற்றும் நிலக்கரி கடத்தல் அதிகரித்ததாக குற்றம் சாட்டினார்.
அதன் பிறகு பாஜக ஆட்சி அமைத்தால் ஊழல் செய்தவர்கள் ஒருவரையும் சும்மா விடமாட்டோம். பொதுமக்களின் விதியை கொள்ளை எடுத்த ஊழல் தலைவர்களை நேராக்குவதற்காக அவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம் என்றார்.
பெண்களுக்கு ஒரு ரூபாயில் சொத்துப்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும். மேலும் பிரதமர் மோடி தலைமையின் கீழ் பிரதமர் லட்சாதிபதி ஆவதா, அல்லது ஊழல் அதிகரிப்பதா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.