சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு சிறப்பு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக 25 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய உத்தர வினை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை தாக்குவோருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற அறிக்கையை மக்கள் பார்வையில் வைக்கும்படி வைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் போலீஸ் ரோந்து, சிசிடிவி செயல்பாடு, காவல் உதவி செயலி பயன்பாடு போன்றவற்றை அதிகரிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.