மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களூரு சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி சந்திரசேகரை மிரட்டியதாக மத்திய அமைச்சரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சந்திரசேகர் பெங்களூரு சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் குமாரசாமி மீது புகார் அளித்தார். ஐபிஎஸ் அதிகாரி சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில் மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் மத்திய அமைச்சரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமி மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் குமாரசாமி, அவரது மகன் நிக்கிக் குமாரசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மத்திய அமைச்சர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.