சபரிமலை வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தேவோசம் நிர்வாகம்  

திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை வரும் பக்தர்களிடத்தில், இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.
சபரிமலை பக்தர்கள் இருமுடி கட்டில் எடுத்து வரும் நெய் தேங்காய், தேங்காய், அரிசி, பன்னீர், சாம்பிராணி, கற்பூரம், மஞ்சள் போன்ற பொருட்களை அய்யப்பனுக்கு அர்ப்பணிக்கும்போது, நெய் மட்டுமே அபிஷேகத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
18 படிகள் ஏறும் போது, தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. அதேபோல அரிசி, பாயசம் வழிபாட்டு கவுண்டர்களில் நன்கொடையாக வழங்க முடியும்.
ஆனால், சாம்பிராணி, பன்னீர், கற்பூரம், மஞ்சள் போன்ற பொருட்கள் பூஜைக்கு பயன்படுத்தப்படுவதில்லை.

You May Also Like

More From Author