சீன மக்கள் குடியரசின் இயற்கை பாதுகாப்பு மண்டலங்கள் மீதான ஒழுங்குமுறைகள் மற்றும் அது தொடர்பான விதிகளுக்கு இணங்க, ஹுவாங்யான் தீவு தேசிய இயற்கை பாதுகாப்பு மண்டலத்துக்கான மேலாண்மை நடவடிக்கைகள் என்ற ஆவணம் ஆகஸ்ட் முதல் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.
2025ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்களில், ஹுவாங்யான் தீவு தேசிய இயற்கை பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க சீன அரசவை ஒபுத்தல் அளித்தது. சீன அரசவையின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த மேலாண்மை நடவடிக்கைகள் வெளியிடப்பட்டன. ஹுவாங்யான் தீவு இயற்கை சூழலியலின் பல்வகைமை, நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சி தன்மையைப் பேணிக்காப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
ஹுவாங்யான் தீவு தேசிய இயற்கை பாதுகாப்பு மண்டலம் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தும். தொடர்புடைய விதிகளின்படி, அனுமதி இல்லாமல் மீன்பிடித்தல், சுரங்கத் தொழில், பவளங்கள் மற்றும் பாறைத்திட்டுகளை அகழ்ந்தெடுத்தல், அரிய கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் இயற்கை சூழல் அமைப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் பிற செயல்பாடுகள் முதலியவை தடை செய்யப்படும். மேலாண்மை நடவடிக்கைகளின் தொடர்புடைய விதிகளை மீறுபவர்கள் சட்டப்படி பொறுப்பேற்க வைக்கப்படுவார்கள் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
