ஸ்லோவாக்கியா அரசுத் தலைவர் பீட்டர் பெல்லெக்ரினி பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக சீனாவில் பயணம் மேற்கொண்டார். அவர் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்த போது கூறுகையில், ஸ்லோவாக்கியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை வலுப்படுத்தி, மானுடவியல் பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், வர்த்தகம், புத்தாக்கம், கல்வி, புதிய தொழில் நுட்பம், போக்குவரத்து, சரக்குப் புழக்கம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த உலகளாவிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு முறையின் உருவாக்கம் பற்றிய கருத்துக்கு அவர் பாராட்டு தெரிவித்ததோடு, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு முறையை உருவாக்கி, அதன் மூலம் வளரும் நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சேவை புரிய செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்துக்கு ஆதரவளித்து, இதில் பங்கெடுத்த முதல் ஐரோப்பிய நாடுகளில் ஸ்லோவாக்கியா ஒன்றாகும். மாற்றங்கள் கொண்ட உலக நிலைமையில், சீனாவும் ஸ்லோவாக்கியாவும் இணைந்து செயல்பட்டு கூட்டாக முன்னேறி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான ஸ்லோவாக்கியா, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம் கருத்து வேற்றுமைகளைச் சமாளிப்பதற்கு ஆதரவளித்து, ஐரோப்பிய-சீன ஒத்துழைப்புகளை முன்னேற்றி வருகிறது என்று தெரிவித்தார்.
