ஜப்பானிய உளவுப் பணியகம் நிறுவப்பட்டதன் காரணம் என்ன?

ஜப்பானிய அரசு கடந்த ஜூலை 31ஆம் நாள் தேசிய உளவுப் பணியகத்தை அதிகாரப்பூர்வமாக நிறுவியது. இது, 2ஆவது உலகப் போருக்குப் பின் ஜப்பான் முதன்முறையாக நிறுவிய தேசிய நிலையிலான உளவுத்துறை அமைப்புமுறையாகும். 1940ஆம் ஆண்டில், இராணுவம் மற்றும் அரசியல் துறைகள் சார்ந்த உளவுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஜப்பானிய அமைச்சரவை உளவுப் பணியகம் நிறுவப்பட்டது. இது, சீனாவுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரிலும் பசிபிக் போரிலும் ஜப்பானிய படைகளுக்கு ஆதரவு அளித்தது. 2ஆவது உலகப் போர் முடிந்தபோது, ஜப்பானிய போர்கால உளவு அமைப்புகள் வலுகட்டாயமாக கலைக்கப்பட்டன. ஆனால், ஜப்பானிய இராணுவவாதம் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. தற்போது ஜப்பானிய உளவுப் பணியகம் நிறுவுதல், அதன் இராணுவ விரிவாக்கத்துக்கும் முறையான இராணுவமயமாக்கலுக்கும் ஒரு முக்கிய செயலாகும். இது, ஜப்பானின் அரசியலமைப்புச் சட்டத்தைச் சீர்குலைப்பதற்கும் வெளிநாட்டில் இராணுவ ஆற்றலைப் பயன்படுத்துவதற்கும் அமைப்புமுறை ரீதியிலான உத்தரவாதம் அளிக்கிறது.

 

You May Also Like

More From Author