பருவமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2409 மில்லியன் கன அடியாக உள்ளது.
1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 93 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 307 மில்லியன் கன அடியாக உள்ளது.