சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் ஓடிடி (OTT) வெளியீடு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விவரங்களின்படி, இப்படத்தின் ஓடிடி உரிமை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஒப்பந்தத்தின் படி, அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 28 நாட்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் என்று முன்பே திட்டமிடப்பட்டது.
ஆனால், அமரன் திரைப்படத்திற்கு திரையரங்குகளில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதால், ஓடிடி வெளியீட்டை ஒரு வாரம் தாமதமாக வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இப்படம் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகக்கூடும்.