சி919 ரக விமானத்தால் இயக்கப்பட்டு வரும் விமானப் போக்குவரத்து நெறிகளை புதிதாக திறந்து வைப்பதாக அண்மையில் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அண்மையில் அறிவித்துள்ளன.
இந்நிலையில், சீனாவில், பெய்ஜிங், ஷாங்காய், சோங்சிங், குவாங்சோ, செங்டு, வுகான், ஹாங்சோ, ஹைகவோ, சிஆன், தையுவான் ஆகிய 10 நகரங்களில் சி919 விமானப் போக்குவரக்குச் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சி919 ரக பெரிய பயணியர் விமானம், சீனாவினால் சொந்தமாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு இந்த விமானம் வணிக பயன்பாட்டிற்கு வந்தது முதல் தற்போது வரை மொத்த 14 விமானங்கள் மூன்று விமான சேவை நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.