எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், 700 சிறுகதைகள், 340 நாவல்கள், 105 தொடர்களை எழுதியுள்ளார். மர்மதேசம், விடாது கருப்பு, ருத்ரவீணை, கிருஷ்ணதாசி, சிவமயம் என்பது போன்ற பல தொடர்கள் இவரது படைப்புகளாகும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சௌந்தர்ராஜன் கடந்த சில மாதங்களாக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள வீட்டில் கழிவறையில் இந்திரா சௌந்தர்ராஜன் மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சௌந்தர்ராஜனை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் அவர்களின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது.
சிறந்த எழுத்தாளரும் , ஆன்மீகப் பேச்சாளரும் , எனது அருமை நண்பருமான அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் .
அவரைச் சார்ந்தோரின் கரம் பற்றிக் கொள்கிறேன்.#இந்திரா_சௌந்தரராஜன்#Writer_IndiraSoundararajan pic.twitter.com/C1VZQ3J3TR
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 10, 2024
இந்த நிலையில், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் அவர்களின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. சிறந்த எழுத்தாளரும் , ஆன்மீகப் பேச்சாளரும் , எனது அருமை நண்பருமான அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரைச் சார்ந்தோரின் கரம் பற்றிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.