மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. அதன்படி திரையுலகில் சாதனை புரிபவர்கள், கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொதுப்பணி, சமூகப்பணி மற்றும் வர்த்தக உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதிப்பவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், மற்றும் பத்ம விபூஷன் போன்ற விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளை ஒடிசா மாநிலத்தில் மட்டும் மொத்தம் 55 பேர் பெற்றுள்ளனர். அந்த மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பத்ம விருதுகள் வென்றவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 30000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால் 2 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.