பெரு நாட்டின் ஊடகத்தில் ஷி ச்சின்பிங்கின் கட்டுரை வெளியீடு

பெரு நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு,ஆசிய

பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு
அமைப்புத் தலைவர்களின்
31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாட்டில்
கலந்து கொள்வதை முன்னிட்டு
, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின்
கட்டுரை உள்ளூர் நேரப்படி நவம்பர்
14ஆம் நாள் எல் பெருவானோ(El
Peruano) நாளேட்டில் வெளியிடப்பட்டது.

இக்கட்டுரையில் ஷி ச்சின்பிங், மிக முன்னதாக சீனாவுடன் தூதாண்மை
உறவை உருவாக்கிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக பெரு திகழ்வதைச் சுட்டிக்காட்டினார்
.
அதோடு, கடந்த 50ஆண்டுகளுக்கும்
மேலாக சீன
பெரு உறவு சீராக முன்னேறி வருவதுடன், இரு நாட்டுப் பயனுள்ள ஒத்துழைப்புகள் செழுமையான சாதனைகளைப் பெற்று,
இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிந்து வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெருவுடன் இணைந்து, உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, சமத்துவமான
மற்றும் ஒழுங்கான உலக பலதுருவமயமாக்கம்
, அனைத்தையும் உள்ளடக்கிய
தன்மையுடைய பொருளாதார உலகமயமாக்கம் ஆகியவற்றை முன்னேற்றி
, உலக
வளர்ச்சி முன்மொழிவு
, உலகப் பாதுகாப்பு முன்மொழிவு, உலக நாகரிக முன்மொழிவு ஆகியவற்றைக் கூட்டாக நடைமுறைப்படுத்தி, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்க சீனா விரும்புவதாகவும் அவர்
இக்கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்
.

You May Also Like

More From Author