சிட்சாங்கிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான வணிக விமானப் போக்குவரத்துச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திட்டப்படி முதல் விமானம் பிப்ரவரி 19ஆம் நாள் காலை 8:10 மணி சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசாவிலிருந்து புறப்பட்டு, செங்து நகரின் வழியாக, மாலை 2:35 ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்திற்குச் சென்றது, இந்த விமானம் வாரத்திற்கு இரு முறை இயக்கப்படும்.
சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் திறப்பை விரிவாக்கி, பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை வலுப்படுத்தி, குவாங்டொங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசத்துடன் ஒத்துழைத்துப் பரிமாற்றத்தை ஆழமாக்குவதற்கு இது வலிமையான ஆதரவு அளிக்கும்.