உள்ளூர் நேரப்படி நவம்பர் 16ஆம் நாள் காலை ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் வணிகத் தலைவர்கள் மாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் “கூட்டு முயற்சியுடன் சவால்களைக் கூட்டாகச் சமாளித்து ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்தை எழுதுவது” என்ற தலைப்பில் தனது உரையை கடிதத்தின் மூலமாக நிகழ்த்தினார்.
திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவை, ஆசிய-பசிபிக் பகுதியின் முக்கிய அம்சமாகும். திறந்த நிலையிலான பிராந்தியக் கொள்கையில், கடந்த 30 ஆண்டுகளில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சராசரி வரி விகிதம் 17 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைந்ததோடு, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு 70 விழுக்காடு பங்களிப்பை ஆற்றியுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதகுலத்திற்கு பகிரப்படக்கூடிய எதிர்காலம் கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று நான் முன்வைத்தேன். கடந்த சில ஆண்டுகளில், உலகளாவிய அவசர தேவைகளுக்கு ஏற்பு, உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பு, உலகளாவிய பாதுகாப்பு முன்னெடுப்பு மற்றும் உலகளாவிய நாகரிக முன்னெடுப்பு ஆகியவற்றையும் முன்வைத்தேன். பல்வேறு தரப்புகள் இணைந்து பல்வகை உலகளாவிய அறைகூவல்களையும் சமாளித்து, உலகளாவிய வளர்ச்சியை மேம்படுத்தி, முழு மனிதகுலத்தின் நலன்களை அதிகரிக்கும் நோக்கில், இவை செயல்படுத்தப்படும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலுள்ள பல்வேறு தரப்புகளுடன் இணைந்து இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தி, நிலையான அமைதி, பொதுவான பாதுகாப்பு, கூட்டு செழிப்பு, திறப்பு மற்றும் உள்ளடக்கியத்தன்மை, தூய்மை மற்றும் அழகு ஆகியவைக் கொண்ட ஓர் உலகத்தை கட்டியெழுப்ப சீனா விரும்புகிறது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
மேலும், உலகின் தொழில் மற்றும் வணிகத் துறைகள் சீனாவின் நவீனமயமாக்கலில் முனைப்புடன் கலந்து கொண்டு, சீனாவின் உயர்தரமான வளர்ச்சியில் பெரும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
