இந்திய ரயில்வே கடந்த இரண்டு நிதியாண்டுகளில் (2023-24 மற்றும் 2024-25) 61 இலட்சத்துக்கும் அதிகமான பயணிகள் புகார்களை எதிர்கொண்டதாக ரயில்வே வாரியம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதில், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மின் கோளாறுகள் ஆகியவை புகார்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளன. மத்தியப் பிரதேசத்தின் நீமச்சைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2024-25 நிதியாண்டில், ரயில்வே கிட்டத்தட்ட 32 லட்சம் புகார்களைப் பதிவுசெய்தது. இது முந்தைய ஆண்டை விட (28.96 லட்சம்) 11% அதிகரிப்பு ஆகும்.
2 ஆண்டுகளில் 61 இலட்சத்துக்கும் அதிகமான புகார்களைப் பெற்ற இந்திய ரயில்வே
