சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 20ஆம் நாள் பிரேசிலில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாட்டுத் தலைவர்கள் இரு நாட்டுறவின் எதிர்கால வளர்ச்சி குறித்து நெடுநோக்கு ரீதியில் புதிய ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர்.
இரு நாட்டு உறவை மேலும் நியாயமான உலகத்தையும் தொடரவல்ல பூமியையும் கூட்டாக உருவாக்கும் சீன-பிரேசில் பொது எதிர்காலச் சமூகமாக உயர்த்துவதாகவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவைக் கூட்டாக செயலாக்குவதை பிரேசில் நாட்டின் வளர்ச்சி நெடுநோக்குடனும் இணைப்பதாகவும் இரு நாட்டுத் தலைவர்கள் கூட்டாக முடிவெடுத்தனர்.
முன்னேற்றப்பட்ட இரு நாட்டுறவு சீன-பிரேசில் உறவின் புதிய மைல் கல்லாகத் திகழ்கிறது. எதிர்கால வளர்ச்சி மீதான இரு தரப்பின் எதிர்பார்ப்புகள் பெரிதும் ஒருமித்த கருத்தாக இருக்குமென இது வெளிக்காட்டியுள்ளது. அதோடு, மனிதகுலத்தின் எதிர்காலம் மீதான பொறுப்புணர்வும் இரு நாட்டுறவின் உலகத் தன்மை, நெருநோக்குத் தன்மை மற்றும் நீண்டகாலத் தன்மையும் அதில் வெளிக்காட்டப்படுள்ளன.
வளர்ச்சி என்பது எல்லா பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திறவுகோலாகும். பெரும்பாலான வளரும் நாடுகளின் பொது விருப்பமுமாகும். சீனா மற்றும் பிரேசிலுக்கு இடையே பயனுள்ள ஒத்துழைப்பை எவ்வாறு முன்னேற்றுவது குறித்து ஷிச்சின்பிங்கின் பிரேசில் பயணத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்கள் கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொண்டனர். இரு நாட்டு ஒத்துழைப்பின் மேம்பாட்டை இது பெரிதும் முன்னேற்றி தத்தமது நவீனமயமாக்க கட்டுமானத்தையும் விரைவுபடுத்தும். மேலும், சீனா மற்றும் லத்தின் அமெரிக்க பிரதேசத்தின் ஒத்துழைப்பு நிலையும் இதன் மூலம் மேம்படுத்தப்படும்.
பெரிய வளரும் நாடுகளான சீனா மற்றும் பிரேசிலின் உறவு இரு தரப்புக்கும் மட்டுமல்ல, உலக நிர்வாகத்தின் மேம்பாட்டுக்கும் ஆக்கப்பூர்வமாக பங்காற்றி வருகிறது. சீனாவும் பிரேசிலும் மேலும் நெருக்கமாக இணைந்திருந்தால், தெற்குலகத்தின் கூட்டு நன்மைகள் மேலும் நன்றாக உறுதிப்படுத்தப்பட முடியும். உலகின் அமைதி வளர்ச்சியைப் பேணிக்காப்பதற்கான சக்தியும் மேலும் வலுவாக இருக்குமென மக்கள் நம்புவதற்கு பல ஆதாரம் உள்ளன.