’ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டம்’ குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலை குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் அறிக்கையின்படி, ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை(டிச. 12) ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் இன்று செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த மசோதாக்களில் புதிதாக சட்டப்பிரிவு 82(ஏ) இணைக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பிரிவு 83, சட்டப்பிரிவு 172, சட்டப்பிரிவு 327-களில் திருத்தம் மேற்கொள்ளவும் வழிவகை செய்கிறது.