உலகம் முழுவதும் வருகிற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதற்கு முந்தைய தினமான டிசம்பர் 24ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக டிசம்பர் 28ஆம் தேதி வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.