தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு போன்ற அதிக அவசியமான பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுகின்றனர். இந்த நிலையில் 2025-ஆம் ஆண்டு ரேஷன் கடைகள் 11 நாட்கள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம், பிப்ரவரி 11-ஆம் தேதி தைப்பூசம், மார்ச் 31-ஆம் தேதி ரம்ஜான், ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, மே ஒன்றாம் தேதி மே தினம், ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 20-ஆம் தேதி தீபாவளி, டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஆகிய தினங்களில் ரேஷன் கடைகள் செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.