2024ஆம் ஆண்டு பொது மக்களின் புகார்களுக்கு உடனடி பதில் குறித்த சீர்திருத்த மன்றத்தின் துணை நடவடிக்கைகளில் ஒன்றாக, பொது மக்களின் புகார்களுக்கு உடனடி பதில் குறித்த பெய்ஜிங்கின் சீர்திருத்த நடைமுறையை பிரதிபலிக்கும் “உங்கள் குரல்” என்ற ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா டிசம்பர் 17ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை தலைவரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹை சியோங் இதில் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைமையில் 2 கோடியே 10 இலட்சத்துக்கும் அதிகமான நிரந்தர மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமான பெய்ஜிங், மனித முதன்மை என்ற வளர்ச்சிக் கருத்தில் ஊன்றி நின்று, “பெரிய நகரத்தின் நிர்வாகத்தைப் பொது மக்களின் தேவைக்கு ஏற்ற வகையில் முன்னேற்றுவதற்கான” சீர்திருத்த திட்டம் ஆக்கப்பூர்வமாக முன்வைக்கப்பட்டது. பெய்ஜிங்கில் பொது மக்களின் புகார்களுக்கு உடனடி பதில் குறித்த சீர்திருத்த நடைமுறையின் கதைகள் சீன ஊடகக் குழுமம் கவனமாகத் தயாரித்த இந்த ஆவணப்படத்தின் மூலம் விளக்கி காட்டப்பட்டுள்ளன. இப்படத்தில் கருத்துக்களின் ஆழம், பொது மக்களின் உணர்ச்சி, அரசு வேலையின் அளவு ஆகியவை சாதாரண குடும்பங்களின் வாழ்கையுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன.