சீனா அதன் தேசிய கம்ப்யூட் திறனை இந்த ஆண்டு மட்டும் 30 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்த விவரங்கள் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதார மாநாடு 2024 இல் வெளியிடப்பட்டன.
அதில் கலந்து கொண்ட சீனா அகாடமி ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் டெக்னாலஜியின் பிரதிநிதி வாங் சியாலி, சீனாவில் 8.1 மில்லியனுக்கும் அதிகமான டேட்டாசென்டர் ரேக்குகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் அவை 230 எக்ஸாஃப்ளோப்ஸின் ஒருங்கிணைந்த செயலாக்க சக்தியுடன் செய்லபடுவதாகவும் கூறினார்.
2025ஆம் ஆண்டுக்குள் 300 எக்ஸாஃப்ளோப்ஸை அடைய வேண்டும் என்பது சீனாவின் கொள்கையாகும். அதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.