கேரளாவில் இறுதியாக தாமரை மலர்ந்தது! முதல் பாஜக MP ஆக ஆனார் நடிகர் சுரேஷ் கோபி

மக்களவைத் தேர்தலில், பிரபல மலையாள நடிகரும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான சுரேஷ் கோபி கேரளாவின் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின்படி, கேரளாவின் திருச்சூரில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி.எஸ் சுனில் குமாருக்கு எதிராக கணிசமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

பிஜேபிக்கு, இந்த வெற்றி முக்கியமானதாக இருக்கும். காரணம், இதுவரை கேரளாவில் லோக்சபா தொகுதியை பாஜக கைப்பற்றுவது இதுவே முதல் முறை.

You May Also Like

More From Author