பிராந்திய போக்குவரத்து மையமாக டேலியனின் நிலையை மேம்படுத்துவதற்காக, உலகின் மிகப்பெரிய செயற்கை-தீவு விமான நிலையத்தை சீனா நிர்மாணித்து வருகிறது என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) தெரிவித்துள்ளது.
லியோனிங் மாகாண அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, தற்போது கட்டுமானத்தில் உள்ள டேலியன் ஜின்ஜோவான் சர்வதேச விமான நிலையம், 20 சதுர கிலோமீட்டர் (7.72 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டிருக்கும்.
இந்த புதிய விமான நிலையம் 12.48 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் மற்றும் 10.5 சதுர கிமீ பரப்பளவுள்ள ஜப்பானின் கன்சாய் சர்வதேச விமான நிலையம் ஆகிய இரண்டையும் விஞ்சும் – இவை இரண்டும் செயற்கைத் தீவுகளில் அமைந்துள்ளன.