புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி… ரசிகர்களை குஷி படுத்திய சூப்பர் தகவல்..!! 

Estimated read time 1 min read

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா திரைப்படம் வெளிவந்து 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில் தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இதுவரை 1400 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாக ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், நடிகை ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த படம் கடந்த 6-ம் தேதி வெளியான நிலையில் ரிலீஸ் ஆகி 11 நாளில் 1400 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளது. இதன் காரணமாக 2000 கோடி ரூபாய் வசூலை விரைவில் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பட குழு அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த வருடம் அதாவது ஜனவரி மாதம் 9-ம்‌ தேதி புஷ்பா 2 நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author