சீன-போட்ஸ்வானா அரசுத் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து

 

சீன-போட்ஸ்வானா தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், போட்ஸ்வான அரசுத் தலைவர் டுமா போகோவும் ஜனவரி 6ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளாக, சீன-போட்ஸ்வான உறவு சீரான வளர்ச்சியடைந்து வருகிறது. சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டின் முடிவுகள் செயல்படுத்தப்பட்ட முதலாவது ஆண்டாக, 2025ஆம் ஆண்டு திகழ்கிறது என்றார்.

இந்தப் புதிய துவக்கத்தில், அரசுத் தலைவர் டுமா போகோவுடன் இணைந்து, இரு தரப்புகளும் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, ஒன்று மற்றதன் முக்கிய அக்கறைகளை உறுதியுடன் ஆதரித்து, தத்தமது நவீனமயமாக்க லட்சியத்தைக் கூட்டாக முன்னேற்றி, இரு நாட்டு நெடுநோக்கு கூட்டாளி உறவின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author