சீனாவில் வரி விதிப்புக்கான 28 மேம்பாட்டு நடவடிக்கைகள்

சீனாவில் வரி விதிப்புக்கான 28 மேம்பாட்டு நடவடிக்கைகள் அரசு சாரா தொழில் நிறுவனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில், சீனத் தேசிய வரிவிதிப்புப் பணியகம் ஆகஸ்ட் 6-ஆம் நாள், வரி விதிப்புக்கான 28 மேம்பாட்டு நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. புதிய
நடவடிக்கைகள், நடுத்தர, சிறிய மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், தனியார் வணிகர்கள் ஆகியோருக்கு ஆதரவு அளிக்கின்றன.
கச்சிதமாக கொள்கையை செயலாக்குவது, புத்தாக்க முறையில் வரி விதிப்பை எளித்தாக்குவது, நாடு கடந்த சேவை மேம்பாடு, இன்னல்களைச் சந்தித்த தொழில் நிறுவனங்களுக்கு உதவியளிப்பது முதலிய துறைகளில், மேற்கூறிய 28 நடவடிக்கைகள் ஆக்கமுள்ள பங்கு ஆற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author