ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 24ஆண்டுகளில், இவ்வமைப்பு அதிக கூட்டாளிகளை ஈர்த்து, உயர்தர வளர்ச்சியைப் பெற்று வருகின்றது.
தற்போது உலகளவில் மிகப்பெரிய பரப்பளவு மற்றும் மிக அதிக மக்கள்தொகையை உள்ளடக்கிய ஒரு பிராந்திய அமைப்பாக இது மாறியுள்ளது. பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், கலந்தாலோசனை, பல்வகை நாகரிகங்களுக்கு மதிப்பு அளித்தல், கூட்டு வளர்ச்சியைத் தேடுதல் என இவ்வமைப்பின் கருத்துக்கள், வலுவான உயிராற்றலையும் ஒத்துழைப்பையும் நிலைநிறுத்துவதன் முக்கிய காரணமாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அண்மையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைச் செயலாளர் அண்மையில் பேட்டி அளித்தபோது கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை நேட்டோவுடன் ஒப்பிடுவது தவறு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பனிப் போருக்காக ஏற்படுத்தப்பட்ட விளைப்பொருள் அல்ல.
இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது, யாருக்கும் எதிரானது அல்ல என்று தெரிவித்தார். 6ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டத்தில், இது தொடர்பான செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளிக்கையில் குவோ ஜியாகுவன் இதனைத் தெரிவித்தார்.