பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகளுக்கு 4 அம்சங்களில் போதிய மதிப்பு கொடுக்கும் கொள்கையை சீனா பின்பற்றுகிறது என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் சாலமன் தலைமை அமைச்சர் சோக்கவாரேயைச் சந்தித்த போது வலியுறுத்தினார்.
முதலாவதாக, தீவு நாடுகளின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். இரண்டாவதாக, தீவு நாடுகளின் சொந்த விருப்பத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். மூன்றாவதாக, தீவு நாடுகளின் தேசிய பண்பாட்டுப் பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். நான்காவதாக, தீவு நாடுகள் ஒன்றிணைந்து வளர்ச்சி பெறுவதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.