ஆஸ்திரேலிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் பிப்ரவரி 11ஆம் நாளன்று தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய இராணுவ விமானம் ரோந்து சென்ற போது, சீன இராணுவ விமானத்தின் தொழில் நுட்பமில்லா, பாதுகாப்பற்ற நடவடிக்கைகள் ஆஸ்திரேலிய விமானததிற்கும் அதில் பயணித்த பணியாளர்களுக்கும் அச்சுத்தலை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த கேள்விக்குச் சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாங் சியௌகாங் செய்தியாளர் கூட்டத்தில் பதிலளிக்கையில்,
ஆஸ்திரேலியா தென் சீனக் கடலின் வான்பரப்பில் ரோந்து சென்று சீனா மீது ஆக்கிரமூட்டல் நடத்தையை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், பொய்த் தகவல்களையும் பரப்பி வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.
இப்பிரச்சினையில் சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதியாகப் பேணிக்காக்கும் பொருட்டு சீனா ஆஸ்திரேலியாவிடம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது, மேலும் ஆஸ்திரேலியா குருட்டுத்துணிச்சல் கற்பனையைக் கைவிட்டு, தன் நாட்டின் கடல் மற்றும் வான் படை செயலைக் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.