அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் பிப்ரவரி 13 ஆம் நாள் இந்திய தலைமை அமைச்சர் மோடியுடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்குப் பின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினர்.
அப்போது பேசிய டிரம்ப், இந்தியா அமெரிக்காவிலிருந்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவினை வாங்கவுள்ளதாகவும் இந்தியாவின் மிகப் பெரிய விநியோக நாடாக அமெரிக்கா மாற விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவுக்கான எஃப்-35 ஸ்டெல்த் போர் விமானத்தின் விற்பனையை அமெரிக்கா அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இச்சந்திப்பின் போது இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கான சுங்க வரி வசூலிப்பை குறைக்கவுள்ளதாக மோடி தெரிவித்தார்.