தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வரும் தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
புதுமனை நான்காம் தெருவில் நந்தகுமார் என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டித் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் தீக்குச்சிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென புகை வந்ததை அறிந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.