ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது – 3 விசைப்படகுகள் பறிமுதல்!

Estimated read time 0 min read

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக அங்கு ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், 10 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களது 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author