காமராஜர் பல்கலைக்கழகம் : 2 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

Estimated read time 0 min read

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடியால் 2 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து பேராசியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகமானது கடந்த சில மாதங்களாகவே நிதி நெருக்கடியால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பல்கலைக் கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் பல்கலைக் கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author