கொமொரோஸ் ஒன்றியத்தின் அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து

கொமொரோஸ் ஒன்றியத்தின் அரசுத் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அசலி அஸௌமானிக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜனவரி 28ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.


ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனாவும் கொமொரோஸ் ஒன்றியமும் ஒன்றுக்கொன்று நம்பிக்கை கொள்கின்ற மனமார்ந்த நண்பர்களாகும். கடந்த சில ஆண்டுகளாக, இரு நாட்டுறவு உயர்வேகமாக வளர்ச்சியடைந்ததுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகள் செழுமையான சாதனைகளைப் பெற்றுள்ளன என்றார்.


மேலும், சீன-கொமொரோஸ் ஒன்றிய உறவுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றேன் என்றும், அரசுத் தலைவர் அசலி அஸௌமானியுடன் இணைந்து இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு மேலும் செவ்வனே நன்மை புரிய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author