சீன விவகாரத்துக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் கால்தூன், ஜப்பானின் சர்வதேச வர்த்தக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கோனோ யோஹெய் ஆகியோரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ ஜுன் 4ஆம் நாள் தனித்தனியாக சந்தித்து பேசினார்.
கால்தூனுடன் சந்திப்பு நடத்திய போது வாங்யீ கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்தக் கருத்துக்களைப் பின்பற்றி, தத்தமது மைய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, பல்வேறு துறைகளில் பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் ஆழ்ந்த வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
கோனோ யோஹெயைச் சந்தித்த போது வாங்யீ கூறுகையில், ஜப்பான், வரலாற்றின் படிப்பினையைப் பெற்று, மற்ற நாடுகளை ஆக்கிரமிக்காது என்ற ஜப்பான் தலைமையமைச்சர் ஷிகெரு இஷிபாவின் கூற்றுக்கு சீனா முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், வரலாற்றைப் படிப்பினையாகக் கொண்டால் தான், எதிர்காலத்தை சீராக வளர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.