உக்ரைன் வீரர்களை காப்பாற்ற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கோரிக்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதிலளித்தார்.
இது நடக்க, உக்ரைன் தலைவர்கள் தங்கள் படைகளை ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
டிரம்ப் முன்னதாக ட்ரூத் சோஷியலில் புடினை வலியுறுத்தி வெளியிட்டுள்ள பதிவில், “அவர்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று நான் ஜனாதிபதி புடினிடம் கடுமையாகக் கேட்டுக் கொண்டேன்.” என்று கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் படைகள் சரணடைய வேண்டும் என்ற தனது கோரிக்கையை புடின் மீண்டும் வலியுறுத்தினார் என தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.