சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. 18-ம் படி ஏறும் பக்தர்கள் கொடிக் கம்பம் வழியாக நேரடியாக சென்று சுவாமியை தரிசிக்கும் முறையை தேவஸ்தான நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
இதனால் பக்தர்கள் பாலிக்கல் மண்டபம் மற்றும் மேம்பாலம் வழியாக செல்லாமல், நேரடியாக சென்று 30 முதல் 50 வினாடிகள் வரை நின்று ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், கோயில் நடை வரும் 19-ம் தேதி மூடப்படும் எனவும், பங்குனி ஆராட்டு திருவிழாவிற்காக மீண்டும் ஏப்ரல் 1-ம் தேதி நடை திறக்கப்படும் எனவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.