கோத்தகிரியில் உள்ள அரங்கநாதர் கோயிலில் மாசிமக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேர்பன் கிராமத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த் திருவிழா கோலாகமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டு மாசி திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அரங்கநாதர், ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நிலையில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.