தமிழகத்தில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தால் மாணவர்களின் வருகை மற்றும் ஊட்டச்சத்து அதிகரித்துள்ளது.
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவு செய்யப்படும். பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 10,000 புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 37 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்படும். மேலும் சென்னை கோவை மற்றும் மதுரையில் 875 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.
மத்திய அரசு கல்விக்கான 2000 கோடி நிதியை விடுவிக்காத நிலையில் தமிழக அரசு தங்களுடைய சொந்த நிதியிலிருந்து விடுவித்துள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ள நிலையில் ஒருபோதும் மும் மொழிக் கொள்கையை மட்டும் ஏற்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் முதியோர்களை பராமரிப்பதற்காக 25 இடங்களில் முதியோர் அன்புச் சோலை அமைக்கப்படும். அதன் பிறகு குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் 10 புதிய அரசு கலை கல்லூரிகள் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு வரும் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.