சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூப்பர் ஓவரில் பூஜ்ஜிய ரன்கள் எடுத்த முதல் அணி என்ற துரதிர்ஷ்டவசமான சாதனையை பஹ்ரைன் படைத்துள்ளது.
மலேசிய டி20ஐ முத்தரப்பு தொடரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) பாயுமாஸ் கிரிக்கெட் ஓவலில் நடந்த ஹாங்காங்கிற்கு எதிரான மோதலின் போது இந்த மோசமான சாதனை படைக்கப்பட்டது.
பஹ்ரைன் ஹாங்காங்கின் 129/7 என்ற மொத்த இலக்கை துரத்தி விளையாடும்போது கடைசி இரண்டு பந்தில் 7 தேவைப்பட்டது.
அப்போது பஹ்ரைனின் கேப்டன் அஹ்மர் பின் நாசிர் ஐந்தாவது பந்தில் சிக்சர் அடித்து, கடைசி பந்தில் அவுட்டானார். இதனால் போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது.