இவ்வாண்டின் முதல் 10 திங்கள்காலத்தில் சீனாவின் தொலை தொடர்பு துறை நிதானமாக இயங்கி வருகிறது. இத்துறையின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதிய சேவைகள் இத்துறையின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு பங்காற்றியுள்ளன. 5ஜி, பொருள் இணைப்பு இணையம் முதலிய அடிப்படை வசதிக் கட்டுமானம் ஆகியவை நிதானமாக முன்னேறி வருகின்றன. இதன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து விரிவாகி வருகிறது.
அக்டோபர் இறுதி வரை 5 ஜி தளங்களின் எண்ணிக்கை 41 இலட்சத்து 41 ஆயிரமாக இருந்தது. அகன்ற அலைவரிசை இணைய சேவை எண்ணிக்கை 120 கோடியைத் தாண்டியுள்ளது.
இதே காலத்தில், அகன்ற அலைவரிசை இணையத்தின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 66 கோடியே 80 இலட்சமாக இருந்தது. 5ஜி செல்லிடபேசி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 99 கோடியே 50 இலட்சமாக இருந்தது.