சீனாவின் தைவான் பிரதேசத் தலைவர் லாய் ட்சிங்தெ மார்ச் 13ஆம் நாள் உரைநிகழ்த்தியபோது, தைவான் நீரிணையின் இரு கரைகளும் ஒன்றையொன்று சேராது என்ற தவறான கருத்தை மீண்டும் பரப்பினார்.
மேலும் அவர் கூறுகையில், சீனப் பெருநிலப்பகுதியை, விரோதமான வெளிநாட்டு சக்தியாக வரையறுத்துள்ளது. அவர் முன்பு வெளியிட்ட ”புதிய இரு நாடுகள்” என்ற கூற்றை விட, நடப்பு உரையின் கருத்து மேலும் ஆபத்தாகியுள்ளன.
அமெரிக்காவில் புதிய அரசு பதவி ஏற்ற பின், அது தைவான் பிரச்சினையில் கவனமான மனப்பாங்கைக் கடைப்பிடித்து, தைவான் பாதுகாப்பை உறுதிசெய்ய பகிரங்கமாக வாக்குறுதி அளிப்பதை நிராகரித்து விட்டது. மேலும், அண்மையில் உக்ரைன் நெருக்கடிக்கு அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதால், தைவான் கூட கைவிடப்பட்ட செஸ் பீஸ் ஆகிவிடும் எனத லாய் ட்சிங்தெ கவலை அடைந்து வருகின்றார்.
இதனால், லாய் ட்சிங்தெவின் வட்டாரம், அமெரிக்காவின் ஆயுதங்களை வாங்கும் பட்டஜெட்டை அதிரடி உயர்த்தியுள்ளதோடு, தைவானின் டிஎஸ்எம்சி (TSMC) நிறுவனம் அமெரிக்காவில் 10ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் முதலீட்டை அதிகரிக்க முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம், லாய் ட்சிங்தெவின் வட்டாரம் தனது மதிப்பை அதிகரிக்க முயன்றது.
தைவான் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது பற்றி சீனப் பெருநிலப்பகுதி ஏற்கனவே தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளது. அதாவது, அமைதியான முறையில் நாட்டின் ஒருமைப்பாடு அடையும் எதிர்பார்ப்புக்காக, இயன்ற அளவில் மிகுந்த நேர்மையான மனப்பான்மையுடன், முயற்சி செய்ய விரும்புகின்றோம்.
ஆனால், தைவான் சுதந்திரத்துக்கான பிரிவினைவாத சக்தி, கடக்க முடியாத சிவப்புக் கோட்டைத் தாண்டினால், உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.