வசந்த காலத்திலுள்ள சீனா”பேச்சுவார்த்தை கூட்டம்

சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த வசந்த காலத்திலுள்ள சீனா: சீனாவின் வாய்ப்புகளை உலகத்துடன் பகிர்வு என்ற பேச்சுவார்த்தை கூட்டம் அண்மையில் கத்தாரின் தலைநகரான தோஹா, கியூபாவின் தலைநகரான ஹவனா, ரஷிய தலைநகரான மாஸ்கோ ஆகிய இடங்களில் நடைபெற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய் ஷியொங் இதில் காணொளி மூலம் உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், இவ்வாண்டின் இரு கூட்டத் தொடர்களில், அமைப்பு சார்ந்த வெளிநாட்டுத் திறப்பு பணியை நிலையாக முன்னெடுத்து, சர்வதேச ஒத்துழைப்பு வாய்ப்புகளைத் தொடர்ந்து அதிகரிப்பதை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

உலக நண்பர்களுடன் இணைந்து, புதிய யுகத்தில் சீன அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு, உலகின் கூட்டுச் செழுமையை முன்னெடுப்பதற்கும், மனித பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதற்கும் பங்காற்ற, சீன ஊடகக் குழுமம் விரும்புகிறது என்றார்.

 

You May Also Like

More From Author