சீன, வட கொரியத் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் அனுப்பிய வாழ்த்து செய்தி

சீன-வட கொரிய தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங்கும் வட கொரியத் தொழிலாளர் கட்சி பொது செயலாளர் கிம் ஜோங்யுன்னும் அக்டோபர் 6ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.


ஷிச்சின்பிங் கூறுகையில், 75 ஆண்டுகளுக்கு முன், சீனாவும் வட கொரியாவும் தூதாண்மை உறவை அதிகாரப்பூர்வமாக நிறுவியது, பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாட்டு பாரம்பரிய நட்புறவு, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் பொது மதிப்புள்ள செல்வமாக விளங்குகிறது என்று சுட்டிக்காட்டினார்.


அவர் மேலும் கூறுகையில் சீன-வட கொரிய உறவின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கிறேன். புதிய காலத்திலும் புதிய சூழ்நிலையிலும் வட கொரியாவுடன் இணைந்து, இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, நெடுநோக்கு தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, நட்பார்ந்த பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டு பாரம்பரிய நட்புறவுக்கான புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்க சீனா விரும்புவதாக வலியுறுத்தினார்.


கிம் ஜோங்யுன் கூறுகையில், வட கொரியாவின் கட்சி மற்றும் அரசு, புதிய யுகத்தின் கோரிக்கையின்படி, வட கொரிய-சீன நட்பார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

பொது செயலாளர் ஷிச்சின்பிங்கை மையமாக கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சோஷலிச நவீனமயமாக்க நாட்டை பன்முகங்களிலும் கட்டியமைக்கும் போக்கில் சீன மக்கள் புதிய சாதனையைப் பெற அவர் வாழ்த்து தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author