சீனா 47 நாடுகளைப் பிரதிநிதிப்படுத்தி முன்வைத்த “தடையற்ற அணுகல் கட்டமைப்பு அனைவருக்கும் மனித உரிமைகளை அனுபவிக்க உதவுகிறது” என்ற தீர்மானம் 5ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 63ஆவது கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவ்வரைவுத் தீர்மானம், தடையற்ற அணுகல் மற்றும் முதியோர்களுக்கு ஏற்ற கட்டமைப்பு வளர்ச்சியை முன்னேற்றுவதில் ஈடுபட்டு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில் நுட்பங்களால் ஏற்பட்ட வாய்ப்புகள் மற்றும் அறைகூவல்களில் கவனம் செலுத்தி, புதிய எண்ணியல் தொழில் நுட்பப் பயன்பாட்டில், புத்தாக்கம், சகிப்பு, திறப்பு, சமத்துவம், பாதுகாப்பு, நம்பகம் முதலிய கோட்பாடுகளில் ஊன்றி நின்று, தடையற்ற அணுகல் தகவல் பரிமாற்றத்தை முன்னேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.
சர்வதேசச் சமூகம் பல்வகை குழுக்களின் மனித உரிமைகளை மேலும் முன்னேற்றி, பாதுகாத்து, தொடர்புடைய துறைகளின் உலகளாவிய நிர்வாகம் மற்றும் வரையறையை வகுப்பதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது.
