சீனாவின் 2026ம் ஆண்டு தேசிய இன ஒற்றுமை மற்றும் முன்னேற்ற வாரப் பரப்புரை நடவடிக்கை செப்டம்பர் 21ம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது. இந்த வாரக் காலத்தில் முக்கிய பரப்புரை காணொளி வெளியிடப்படும். தேசிய இன ஒற்றுமை மற்றும் முன்னேற்ற இலட்சியத்தின் சாதனைகளை வெளிக்காட்டும் வகையில், 56 தேசிய இனங்களின் பிரதிநிதிகள், தேசிய ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்கான முன்மொழிவையும், பல்வேறு இன இளைஞர்களிடையே பரிமாற்றத் திட்டங்கள் குறித்த தொழில் சின்னங்களையும் கூட்டாக வெளியிட உள்ளனர்.
நடப்பாண்டின் பரப்புரை நடவடிக்கை, 21ம் நாள் தொடங்கி 27ம் நாள் வரை நடைபெற உள்ளது. சீனாவின் தேசிய இன ஒற்றுமை மற்றும் முன்னேற்ற ஊக்குவிப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின் நடைபெறும் முதல் பரப்புரை நடவடிக்கை இதுவாகும்.
