அமெரிக்க செனெட் அவை உறுப்பினர் டயன்ஸ் சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் மார்ச் 21ஆம் நாள் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு துறையினர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்வதை வரவேற்கிறோம்.
மேலும், சீன-அமெரிக்க உறவு சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை நிலைநிறுத்துவது, இரு நாட்டு மக்களின் கூட்டு நலன்களுக்கும், சர்வதேச சமூகத்தின் பொது எதிர்ப்பார்ப்புக்கும் பொருந்தியதாகவும் தெரிவித்தார்.
