ஆசியான் தலைமை செயலாளர் கௌ கிம் ஹுன் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், கடந்த சில பத்து ஆண்டுகளின் கூட்டு முயற்சியுடன், சீன-ஆசியான் உறவில் வலுவான உந்து சக்தி மற்றும் உயிராற்றல் காணப்பட்டதோடு, சாராம்ச ரீதியான முன்னேற்றங்கள் பெறப்பட்டுள்ளன. பொருளாதார மேம்பாடு, வளர்ச்சி, மாற்றத்திற்கு ஏற்ற தொடர்ச்சியான புத்தாக்கம், சுய மதிப்பீடு மற்றும் தலைமைத்துவ பண்புகள் தேவை. பொருளாதார அதிகரிப்பினால் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில், பொருளாதாரத்தில் எவ்வாறு முதலீடு செய்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
அதனால் ஏற்படும் செழுமையைக் கூட்டாக அனுபவிப்பது, நமது பொது கருப்பொருளாகும். ஆசியானுக்கும் சீனாவுக்குமிடையில் நடைபெற்று வரும் வர்த்தக ஒத்துழைப்பு மூலம், இரு தரப்பும் கூட்டு வெற்றி பெறுகின்றன. ஆசியானும் சீனாவும் பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாகக் கட்டியெழுப்புவது மிக முக்கியமாகும் என்று தெரிவித்தார்.