உலக இணைய மாநாட்டின் ஆசிய-பசிபிக் கூட்டம் ஹாங்காங்கில் நடைபெற்றது

2025ம் ஆண்டின் உலக இணைய மாநாட்டின் ஆசிய-பசிபிக் கூட்டம் ஏப்ரல் 14, 15ம் நாட்களில் சீனாவின் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. உலகளவில் 50க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அரசு வாரியங்கள், பன்னாட்டு அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் முதலியவற்றின் சுமார் ஆயிரம் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு பெரிய மாடல், எண்ணியல் நிதி, எண்ணியல் அரசாட்சி, நுண்ணறிவு வாழ்க்கை முதலிய அம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி லீ ஜியா ச்சாவ் கூறுகையில், புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக உறவில் பதற்றம் காணப்பட்ட நிலையில், ஒத்துழைப்பு மிக முக்கியமானது. வர்த்தகத் தாராளம் மற்றும் பலதரப்புவாதத்துக்கு ஆதரவளிக்கும் ஹாங்காங், முதலீட்டாளர்களுக்கு ஒரு தொகுதி சலுகை கொள்கைகளை வழங்கி, ஹாங்காங்கில் வளர்ச்சி பெற விரும்பும் நிறுவனங்களை வரவேற்கிறது என்று தெரிவித்தார்.

படம்:VCG

You May Also Like

More From Author